மனிதம் வளர தமிழைக்காப்போம்

"மனிதம் வளர தமிழைக்காப்போம்"

சுயநலம் : என்னுல் இருக்கும் " சுயம்" தெரிகிறவரையில்.....

பொதுநலம்: சமுதாயம் என்னை பிரதிநிதியாக பார்க்க வைக்கிறது.

பணம்: வாழ வழி செய்யும்; வாழ விடாமலும் தடுக்கும்.

புகழ்: ஏங்குகிற வரையில்...

வெற்றி: என்னை நான் பிறருடன் பொருத்திப் பார்க்கும் வரையில்...

தோல்வி : பிறரின் இயலாமை..

மனம் : அந்த குரங்கை ரசிக்கத் தொடங்கி விட்டேன்.


அறிவு: என்னுடன் இருக்கும் சுயம்.

சுயம் + மனைவி = வாழ்க்கை

சுயம் + சமூகம் = சேவை

சுயம் + பிள்ளைகள் = பாசம்

சுயம் + மனிதம் = இறக்கம்

சுயம் + இயற்கை = வாழ்வியல்.


தமிழன் வாழ்வியல் பயின்றவன்.
இயற்கையை நேசித்து வாழ்ந்தவன்.
இயற்கையை வணங்குபவன், வழிபடுபவன்.

காடு சார்ந்து (குறிஞ்சி) , மலை சார்ந்து (முல்லை) , வயல் சார்ந்து ( மருதம்) , கடல் சார்ந்து (நெய்தல்) பிறகு வரட்சி சார்ந்தும் (பாலை) வாழ்த்து உலகிற்கு வாழ்வியலை கற்பித்தவன்.


தமிழ் பயில்க ; தமிழன் இந்த உலகத்தை காப்பாற்ற பிறந்த அற்புதமான பிறவி.
மனிதம் வளர தமிழை காப்போம்.

தமிழ் ஒருவனை மனிதனாக மாற்றும்.


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்".


யாதும் ஊரே; யாவரும் கேளீர் !!!

எழுதியவர் : (14-Feb-23, 7:39 am)
சேர்த்தது : செல்வன் ராஜன்
பார்வை : 30

மேலே