கட்குடியும் விற்பனையும் காணுகின்ற தீக்காசு - இன்னிசை வெண்பா

இன்னிசை வெண்பா
(‘ற்’ ‘ட்’ ‘க்’ வல்லின எதுகை)

நற்குடித் தோன்றினரின் நல்லதோர் ஆளுமையால்
கட்குடியும் விற்பனையும் காணுகின்ற தீக்காசும்
எத்துணையும் உன்றனுக்(கு) ஏற்றமுந் தந்திடா(து)
அத்துயரும் வேண்டுமோ அங்கு! 1

நேரிசை வெண்பா
(‘ற்’ ‘ட்’ ‘க்’ வல்லின எதுகை)

நற்குடித் தோன்றினரின் நல்லதோர் ஆளுமையால்
கட்குடியும் விற்பனையும் காணுகின்ற - இக்காசும்
எத்துணையும் உன்றனுக்(கு) ஏற்றமுந் தந்திடா(து)
அத்துயரும் வேண்டுமோ அங்கு! 2

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Feb-23, 7:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 63

மேலே