மாமன் மகள் வருகை

மாமன் மகள் வருகைக் கண்டு
மயக்கும் மல்லிமொட்டும்

அரும்பு அல்லியும் நேரம் காலம்
மாறி மணம்தான் வீசின மனம் மாறி

பசுஞ்சோலை மயில் எலாம் தன்தோகை கொண்டு சாமரம் வீசின

வான் முகில் தான் தனைதழுவிச் சென்றதுயென எண்ணியே

பழம் கொத்தி பறவையாம் பச்சைக்கிளி கூட்டமெல்லாம்

இவள்மேல் இச்சைக்கொண்டு கச்சைக்கட்டி கொண்டன

பழம் திண்பதை மறந்து
தன்னழகு அலகினிலே

துள்ளிஓடும் மான்கூட்டமெலாம்
அள்ளித்தின்றன அவள் அழகை

புல் கூட்டம் எல்லாம் தனைக் கண்டு
பழித்து புன்னகைப்பதையே மறந்து

கட்டிக்கரும்பும் கட்டழகி இவள்சேலைக்கொண்டு
தன்இடையை மறைப்பதைகண்டு

தன்வெட்டுப்புல் எனும்
கணுவின் தழும்பினை தன் சோலை
கொண்டு மறைத்தனவே

இன்னும் இருக்கும் இயற்கை எலாம்
செயற்கை கொண்டு

செய்வதறியாது போகும் முன் மயக்கும் நின் கூந்தல் மாமன் யென்

மடிமீது துயில் கொள்ள தூயவளே
துள்ளி எழுந்து வா

மனம் கொண்டு தினம் நினைக்கும் இந்த மாமனையே

பணம் கொண்டு சேராமல் குணம்கொண்டு மணப்பேன் என...

திருமணம் எனும் தேரினிலே
உறவுகள் சூழ உலகினிலே

உன்னதம் காண்போம் வா
என் மாமன் தந்த பொன் மயிலே...

எழுதியவர் : பாளை பாண்டி (18-Feb-23, 6:42 am)
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே