மீண்டும் அதே ஞாபகம்..!!
கவலையை மறந்து
அழகாகவும் ஆனந்தமாகவும்
சுற்றித்திரிந்த காலம்
மழலைப் பருவம்..!!
நண்பர்களுடன்
விளையாடி கொண்டு
எனக்கு உனக்கென
போட்டியில் இருந்த
காலம்..!!
எது சரி எது தவறு
என்று தெரியாத போதும்
ஆனந்தமாக தான் இருந்தோம்..!!
அக்கா தங்கையோடு அண்ணன் தம்பியோடு எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் சிறப்பை நகர்ந்தது நாட்கள்..!!
அவ்வப்போது வந்து போகிறது அந்த காலம் ஞாபகங்கள் எல்லாம்..!!