அகிலம் உனக்கே

அகிலம் உனக்கே !
............................

முயற்சியில் என்றும்
முடங்காது தொடர்ந்திட /

பயின்றிடும் கலைகள்
பலன்மிகத் தருமே !

உழைப்பின் வாரா
உயர்வுகள் இலையே/

பிழையா செயலால்
பெரும்புகழ் வருமே !

வானும் நிலமும்
வளமும் வறட்சியும்/

மீனும் கோளும்
மீளாத சுழற்சியே !

அன்பும் பண்பும்
அறமெனக் கொண்டு /

அன்னையைப் போற்றினால்
அகிலம் உனக்கே /

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (24-Feb-23, 11:40 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 270

மேலே