கூழதைக் குடி மானமாய் குடிசையில் வாழு
நேரிசை ஆசிரியப்பா
ஒழுகிசை அகவல் ஓசை
நாயாய் கத்தி என்செய் வாய்நீ
காரில் போவான் காலை நீட்டி
தங்கத் தட்டில் உண்பான் மாளிகை
வசிப்பன் மானம் விற்று வாழ்வான்
கூட்டியும் கொடுப்பான் போதை விற்பன்
கள்ளை விற்று வில்லையாய் பணத்தை
கொள்ளை செய்வன் முடியுமா உன்னால்
அவனது தொழிலை செய்வா யாநீ
பிறகு எதற்கு புலம்பல் நீயும்
பொறாமை கொண்டென் செய்வாய்
கூழதை குடிசை உண்டும் உயர்வாய்
...