ஏழ்மை
ஏழ்மை ஒழிக!
தங்கத் தட்டில்
வயிறார உண்டு
இலவம் பஞ்சு திணித்த
சொகுசு மெத்தையில்
உறங்கும் பணப் பெருச்சாளிகள்
பொழுது போக்காக
வெயில் தாழ்ந்தவுடன்
செய்தி நிருபர்கள்
புகைப்படக்காரர் புடைசூழ
வெளியில் ஒருங்கிணைந்து
எழுப்புகின்றனர் கோஷம்
"தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
இந்த ஜகத்தினை
அழித்திடுவோம்"
புகைப்படம் எடுத்தாகிவிட்டது
புறப்பட்டு விட்டனர்
மீண்டும் உணவு வேட்டைக்கு.
ஏழ்மை ஒழிக,
எழுபது ஆண்டுகளாக!
சம்பத் குமார்