புதுமைப்பெண்ணே

புதுமைப்பெண்ணே
மின் கம்பம் ஏறும் சாதனை பெண்ணே
நீ சாதாரண பெண் இல்லை;
பாரதிகண்ட புதுமைப்பெண்;
தைரியத்தை கையில் ஏந்து;
தன்மானத்தை தோளில் ஏந்து;
உன் வெற்றிக்கு உயரம் ஒன்றும் துயரம் இல்லை;
நம்பிக்கையை மனதில் ஏந்து;
நம்பி கவனமாய் மின் கம்பத்தில் ஏறு;
பெண் உரிமை காக்க வந்த அழகு தேவதையே,
உன் கடமைக்கு முன்
மின்சாரம் என்ன செய்யும்;
மின்சாரமும் மிரண்டு போகும்
வெற்றி சிறகை விறிப்பாய் பெண்ணே.
அ. முத்துவேழப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
