ராஜேந்திரன்
01.03.2023
ராஜேந்திரன்...
ஊரார் பிள்ளையை
ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானே வளரும்
என்று சொல்லும்
ஆசிரிய ஜாதி இவரது ஜாதி..
இவர் எடுக்கும் முடிவுகள்
மாணவ வெற்றி மாலைக்கு
இவர் தொடுக்கும் பூக்கள்..
இளைஞர்களோடு இருந்து
இளைஞர்களுக்கு வழி
காட்டுவதால் இவர் இன்னும்
இளைஞராகவே இருக்கிறார்..
கனிவாய் இருப்பதில்
மிகவும் கண்டிப்பானவர்...
கண்டிப்பு காட்டாமல்
கனிய வைக்கத் தெரிந்தவர்..
பார்த்தால் விலக வைக்கும்
பதவி இவருடையது...
இவர் பார்க்காமலேயே
இவரை நெருங்கி வந்து
ஹலோ சொல்ல வைக்கும்
இயல்பு இவருடையது..
இப்படித்தான் இருக்க வேண்டும்
என்னும் மரபை உடைத்து
இப்படியும் இருக்கலாம் என
வெற்றிக்கு வழி காட்டும்
முதல்வர்களில் முதல்வர்..
இவரிடம் படிக்கும்
மாணவ மாணவியர்களின்
ஜாதகங்கள் பொதுவான
அம்சம் ஒன்றைச் சொல்லும்..
அது... நல்ல முதல்வர்
பணியாற்றும் கல்லூரியில்
படிக்கும் யோகம் இருக்கும்
என்பதாய் இருக்கும்..
முதன்மையானவர் என்று
சொல்வதில் அன்று
சோழ அரசர்களில்.. இன்று
கல்லூரி முதல்வர்களில்
ராஜேந்திரன் எனும் பெயர்
தவிர்க்க முடியாதது...
நண்பன் ராஜேந்திரன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
🌹🌷🪷👍😍