முயற்சி திருவினையாக்கும்

புரியாத புதிரென்று எதையும்
உணர்ந்து பார்க்காமல்
ஒதுக்கக்கூடாது,
வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல்
வாழ்ந்து கொண்டிருக்கும் நாம்
வாழ்வில் முன்னேறுவது சாத்தியமா?

எதை எப்படி பார்க்கிறோமோ
அதைப் பொறுத்தே நமக்கு
எல்லாமும் அமைகிறது,
எதைக் கண்டும் அஞ்சாமல்
வாழ்க்கை என்பதற்கு
விடை காண முயன்றால்
விளக்கமும், வாழவழியும் கிட்டும்

அவரவர்களின் சிந்தனைக்கு
ஏற்றவாறு சிந்திக்கும்போது
உண்மைகளை உணர்வீர்கள்,
வேண்டுவதை தேடுங்கள்
பெறவேண்டி உழையுங்கள்
வெற்றி பெறுவீர்கள்
முயற்சி திருவினையாக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (5-Mar-23, 5:57 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 28

மேலே