என் நித்திரையிலும் உன் சிந்தனையோடு விழித்திருப்பேன் உனக்காக,,,,,,,,,,,,,,
![](https://eluthu.com/images/loading.gif)
பச்சை வான பட்டுடுத்தி
பக்கமாக போனவளே
உன் எச்சம் பட்ட பார்வையாலே
சுக்கு நூறாய் போனேனடி,
அந்தி வானம் சிவக்கு தடி
உன் நினைவு சாரல்
என்னை நனைக்கு தடி
என் கண்கள் இரண்டும் கலங்கு தடி
அதை துடைக்க நீயும் அருகே இல்லையடி,
உன் அப்பனோடு போகையிலே
என்ன சொற்பமாக பார்த்தாயடி
நீ நின்று போன இடமெல்லாம்
வெகு நேரம் நின்று நானும் செல்கிறேனடி
உன் சொற்ப்பமான பார்வையும்
அர்த்தமாக மாறாதா என்று,
நீ சூடி தந்த மலர்க்கொடி
இன்று காய்ந்த பின்னும் காவியமாய்
நீ அல்லி விட்ட வார்த்தைகள்
என் பேனாவுக்கு கண்ணீராய்
படித்து பார்த்தும் புரியவில்லை
கிழிக்க நினைத்தும் முடியவில்லை,
நீ முகம் காட்டிய பொழுதுகள்
நான் என்னை மறந்த இரவுகள்
இன்றும் மறையாத உன் நினைவுகள்
இனி திரும்புமா அந்த நிகழ்வுகள்,
என் காதலுக்கு
கருப்பு கொடி காட்டும்
உன் விழிகளுக்கு
என்னை வெறுக்க என்ன காரணம்
சொல்லி விடு தேவதையே,
உனக்காகவே வெள்ளை காகிதத்தில்
என் குருதி கலந்து
உன் மையிட்ட விழிகளின் நினைவோடு
நான் எழுதும் என் இறுதி கடிதம்,
அன்பே கடிதம் கிடைத்த கையேடு
என் கல்லறை தேடி வருவாயா,
என் காதல் புதைந்த மண்ணோடு
உன் பாதம் கொஞ்சம் படாதா,
என் நித்திரையிலும்
உன் சிந்தனையோடு விழித்திருப்பேன்
உனக்காக,,,,,,,,,,,,,,
இப்படிக்கு,,,,,,,,,,,உன்னவன்