தேவை யில்லாப் பேட்டி எடுத்தார்

பேட்டி எடுத்தார்

பேட்டி எனவே நேரடி கேள்விகள்
கேட்க அவரும் நேரமும் ஒதுக்கிட
வீட்டு நிழலில் சில்லெனும் காற்றினில்
பேட்டி எடுத்தார் வேண்டிய கேள்விக்கே

கேட்ட வினாவுக் கேற்ப பதிலை
சட்டென எடுத்துக் கேட்டவர் கொடுக்க
ஆமாம் ஆமாம் என்றே ஆட்டுவர்
தலையை எவரின் பேட்டியை யெவரும்
கேட்ட தில்லை கண்ட நாயின்
பேட்டி என்று இன்று
ஒளிபரப் பியேமக் களைக்கெடுப் பதேனோ





எழுதியவர் : பழனி ராஜன் (13-Mar-23, 9:16 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 64

மேலே