எனோ இந்த வாழ்க்கை

எனோ இந்த வாழ்க்கை
புரியாத புதிராக இருக்கு;
புயலாய் வாழ்க்கை வீசிது;
பூகம்பமாய் சினம் வெடிக்கிது;
பேரலையாய் ஆசைகள் தொடர்ந்து அடிக்கிது;
எரிமலையாய் கோபம் வெடிக்கிது;
புழுவாய் வாழ்க்கை துடிக்கிது;
புனலாய் அன்பும் தீண்டுது;
தென்றலாய் தேடிவந்த பாசமும் வருடுது;
தேளாய் உறவும் கொட்டது;
புழுவாய் வாழ்க்கை துடி துடிக்கிது;
புரியாதது புதிதாய் தான் இருக்குது;
எனோ இந்த வாழ்க்கை
புரிந்தும் புரியாததுமாய் இருக்கு;
எனோ இந்த வாழ்க்கை
அறிந்தும் அறியாததுமாய் இருக்கு;
தெரிந்தும் தெரியாததுமாய் இருக்கு;
இருந்தும் இல்லாதுமாய் இருக்கு;
எனோ இந்த வாழ்க்கை
வாழ்ந்தும் வாழாதது போல் இருக்குது;
எனோ இந்த வாழ்க்கை
ஏமாற்றப்பாக்குது;
எனோ இந்த வாழ்க்கை
ஏமாற்றத்தையே தருது;
ஏனோ இந்த வாழ்க்கை வெரும் வெறுப்பும் ச லிப்புமாகுது;
ஏனோ இந்த வாழ்க்கை
வேதனையையே தருது;
எனோ இந்த வாழ்க்கை
போலியாய் இருந்து கேலி செய்யிது;
எனோ இந்த வாழ்க்கை
வேண்டாதபோது தருது ; வேண்டும் போது தர மறுக்கிறது;
ஏனோ இந்த வாழ்க்கை உண்மையையே வெறுக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை உதாசீனப்படுத்துது;
ஏனோ இந்த வாழ்க்கை ஊருக்கே உலை வைக்க தூண்டுது;
எனோ இந்த வாழ்க்கை
கொடூரமாக இருக்கு.
ஏனோ இந்த வாழ்க்கை என்னை ஏமாற்றுது;
ஏனோ இந்த வாழ்க்கை
எட்டியே நிற்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
வெட்டி விட்டு வேடிக்கை பார்க்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
கைகொட்டி சிரிக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை என்னை எட்டி உதைக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை
எட்டியே நிற்கவைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை;
ஏப்பம் விட பார்க்குது;
ஏனோ இந்த வாழ்க்கை,
எல்லாவற்றையும் எனக்கே எனக்கே என்று பிடிங்கி வைக்கப் பார்க்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
ஏல்லாவற்றையும் ஏப்பம் விடப் பார்க்குது;
ஏனோ இந்த வாழ்க்கை அன்பை வெறுக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
என்னையே விலைபேசுது;
ஏனோ இந்த வாழ்க்கையில் மனம் எல்லாம் அலைபாயிது;
ஏனோ இந்த வாழ்க்கையில் மனம் எல்லாம் குப்பையாய் நிறம்பிக் கிடக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை எகத்தாளம் பன்னுது;
ஏனோ இந்த வாழ்க்கை என்னை விரட்டுது;
ஏனோ இந்த வாழ்கையில் சுகமும் சோகமும் தொத்துது;
ஏனோ இந்த வாழ்க்கை தேடலில் ஓடுது;
ஏனோ இந்த வாழ்க்கை தடுமாற வைக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை தொலைந்து போக பாக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை தொல்லையாய் இருக்குது; ஏனோ இந்த வாழ்க்கை
தொல்லையே தருது;
தொலை தூரம் ஓட வைக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை தேங்கி தேங்கி அழ வைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை வாங்கி வாங்கி தின்று வீங்கியே வயிற்றை ஊதவைக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை எடுத்ததற்கெல்லாம் கோபப்பட வைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
பேராசை பிடித்து திரியிது;
ஏனோ இந்த வாழ்க்கை
பேருக்காக வாழவைக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை பெருமை பெறவே விரும்புது;
ஏனோ இந்த வாழ்க்கை பொறாமை படவே துடிக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை நடிக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை
பேயாட்டம் ஆட்டி படைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
தெண்டமாக இருக்க வைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
ஏன் இப்படியொரு வாழ்க்கை இருக்குன்னு யோசிக்க வைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
அர்த்தமாகவும் அனர்த்தமாகவும் இருக்கு
ஏனோ இந்த வாழ்க்கை
ஆச்சரியப்பட வைக்கது;
ஏனோ இந்த வாழ்க்கை
தள்ளாடுது, தடுமாறுது:
ஏனோ இந்த வாழ்க்கை தடம் புறள வைக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை தடைபோடுது;
ஏனோ இந்த வாழ்க்கையில் அவமானம் துரத்துது
ஏனோ இந்த வாழ்க்கை
அவசர அவசரமாய் பயணிக்கவைக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கை
அன்பும், அனுசரணையும், ஆதரவும், அரவணைப்பும்
ஆரவாரம் செய்யிது;
ஏனோ இந்த வாழ்க்கையில் தன்மானம் தத்தளிக்குது;
ஏனோ இந்த வாழ்க்கையில் கோபம் கொப்பளிக்குது;
ஏனோ இந்த வாழ்க்கையில் அநியாயம் அடம் பிடிக்குது;
ஏனோ இந்த வாழ்க்கையில் நியாயம் விலை போகுது;
ஏனோ இந்த வாழ்க்கையில் ஏழைக்கு நீதி கிடைப்பதில்லை
ஏன்றே நிருபிக்கிது;
ஏனோ இந்த வாழ்க்கையில் அசிங்கம் அப்பியே பெருமை பேசுது;
ஏனோ இந்த வாழ்க்கையில் நியாயம் மௌனம் சாதிக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை உறவுகளை உதாசீனம் படுத்த பாக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை என்னை விரட்டுது,
ஏனோ இந்த வாழ்க்கை உறவாடியே கழுத்தை அறுக்குது;
எனோ இந்த வாழ்க்கை
தடையமே இல்லாது என்னை அழிக்கப் பாக்குது;
எனோ இந்த வாழ்க்கை
என்னைப் பார்த்து சிரிக்குது;
எனோ இந்த வாழ்க்கை
சுத்தி சுத்தி சுழட்டியே விடுது;
எனோ இந்த வாழ்க்கை சுகபோகத்தை தேடுது;
ஏனோ இந்த வாழ்க்கை தள்ளாடுது தடுமாறுது;
ஏனோ இந்த வாழ்க்கை
முதுமையை வெறுக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை
கசப்பும் இனிப்புமாய் இருக்குது;
எனோ இந்த வாழ்க்கை
புரியாதபோது புத்திகெட்டு திரிய வைக்குது, புரிந்தபோது
தூக்கி எறியப்பாக்குது;
ஏனோ இந்த வாழ்க்கை தாங்கி பிடிக்க மறுக்குது;
எனோ இந்த வாழ்க்கை
எல்லாம் புரிந்த போது
முடிந்து போக பார்க்குது;
எனோ இந்த வாழ்க்கை
ஏன் இந்த வாழ்க்கை என்று கேள்வி கேட்க வைக்கிறது;
அன்பரே,
ஏன் இந்த வாழ்க்கை என்ற பயத்தை விடு
ஏன் இந்த வாழ்க்கை என்பதற்கு விடையைத் தேடு;
ஆம் இந்த வாழ்க்கை வாழ்வதற்கே
என்றே துணிந்திடு;
தான் என்ற அகந்தையை விடு;
நாம் என்றே நம்பிக்கையை எடு;
நம்மால் முடியும் என்று விடையை தேடு;
கிடைக்காததை நினைத்து கவலை எதற்கு
இருப்பதை வைத்து வாழ்ந்து காட்டு;
தவறவிட்ட சந்தோசத்தை தேடு;
தவறவிட்ட அன்பைத்தேடு;
தவறாது உண்மையைத்தேடு;
தவறாது உன்னுள் உன்னைத்தேடு;
அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (14-Mar-23, 2:00 pm)
பார்வை : 41

மேலே