பெண்ணே கேள்
பெண்ணே கேள்;
பூவுக்கும் பூவைக்கும் வேறுபாடு இல்லை;
இரண்டும் மென்மை தான் ;
பெண்மையே தன்மை தான்
பெண்மையே மென்மை;
பெண்மையை மேன்மை;
பெண்ணே கேள்;
பிடிவாதம் ஒரு முடக்குவாதம்;
பிடிபட்டால் முடக்கிவிடும்;
பிடிவாதத்தை விடு;
சந்தேகம் உன் சந்தோசத்தை விரட்டும்;
சந்தேகம் என்ற பேயை விரட்டு;
சற்றே சிந்திக்க பழகு ; விட்டே கொடு;
தப்பே ஆனாலும் தட்டிகேட்கும் பாங்கை பழகு;
அன்பின் பிறப்பிடம் அன்னை,ஆத்திரம் எதற்கு
ஆத்திரம் அறிவை மறைக்கும்;
பிரச்சனைக்கு தீர்வு பிடிவாதம் இல்லை;
கணவன் தப்பி தவறு செய்திருந்தாலும்,
தப்பு கண்டுபிடிக்கும் அளவிற்கு குற்றம்வாளி அள்ள, குறைகண்டுபிடிக்க;
குறையும் ஒரு கறை தான்; துடைத்துவிடு;
துறத்தி விரட்டாதே, துன்புறுத்தும் கனவனை
இன்புறுத்து;
இனங்கவில்லை என்றால் நொந்து சாகாதே
நேரடியாக கேள்;
நெத்தியில் அடிப்பதுபோல் கேள்;
புத்திவருவது போல் கேள்;
புரியும் படி அன்பால் புகட்டு;
புரிதலும் தெரிதலும், தெளிதலும் தான் வாழ்க்கை;
ஒளிதல் இல்லை, ஒளிவு மறைவு வேண்டாம்;
பெண்ணே கேள்;
ஊர் பகையைவிட, உறவால் வரும் பகை கொடியது;
உறவாடி கெடுப்பவனை உருட்டிவிடு; விரட்டிவிடு;
கேடுகெட்ட செயலை செய்யாதே;
கேட்டுத் தெளிவு பெறு;
கெட்டு தெளிவடையாதே;
கேட்கும் கேள்வியின் தோரணையை மாற்று;
கேள்விகேட்டுகும் முன்,
பதிலின் விளைவை பாரு
பயத்தை விரட்டு;
பெண்ணே, ரௌத்திரமும் பழகு;
மௌனம், ஆயிரம் கேள்விக்கு பதிலைத்தரும்
மௌனித்து பார்;
மௌனமும் ஆயுதம் தான், மறைத்தே தாக்கும்;
கடின வார்த்தைகளைக் கணைகளாய் தொடுக்காதே;
கண்மூடித்தனமாய் செயல்படாதே;
அன்பு என்னும் கணையைத் தொடு;
பிரச்சனையை பிரிச்சி பார்க்காதே;
பிரச்சனையே பெரிய பிரச்சனை ஆகிவிடும்;
பிரச்சனைக்கு தீர்வு காண்
பெண்ணே;
பிடிவாதம் எதற்கு;
விடாபிடியாக இருக்காதே ;
விட்டு பிடி, விடியும் உன் வாழ்க்கை;
விரக்தியில் தவறான முடிவை எடுக்காதே;
விரும்பிப் பேசு; விரும்பிய படி பேசாதே;
விஷத்திலும் கொடியது, வெறுப்பாய் பேசுவது;
பொறுப்பாய் பேசு; பொறுமையுடன் பேசு;
பொய் பேசாதே
பெண்ணே!
அன்பை ஆயுதமாக்கு; அறிவை ஏவுகனையாக்கு;
கோபத்தை கொட்டித் தீர்க்காதே;
கோபத்தை கொன்று விடு;
இல்லையேல் வென்று விடு;
ஏழையாய் இருந்தாலும்,கோழையாய் இருக்காதே
மனம் போல் செய்யாது;
மனம் உவந்து செய்து விடு;
கேள்விகள் பல கேட்கும் முன், செவி கொடுத்து கேட்க கற்றுக்கொள்;
குழந்தை முன் சண்டை போடாதே;
போர்கலம் இல்லை குடும்பம்;
பகை இல்லை உறவு;
பகைவன் இல்லை உன் கணவன்;
பொறுமையை கடை பிடி;
மீண்டும் மீண்டும் தவறுகள் செய்ய தூண்டாதே;
தண்டணை என்பது தண்டிப்பது இல்லை,
தலை குணிய வைப்பது;
உணரட்டும் அவன் தவறை;
தவறவிடாதே உறவை ;
வாரிசுபோரையும் வர்க்க போரையையும் தூண்டாதே;
நொட்டச் சொல்லு சொல்லாதே
என் குடும்பம் உன் குடும்பம் என்று குடும்ப சண்டையில் குட்டையை குழப்பாதே;
குதூகலம் மறைந்து விடும்;
பாகுபாடு பார்ப்பதே பல பிரச்சனைக்கு ஆதாரம்;
பக்குவமாய் பேசு, பண்போடு பழகு;
அன்பு தானாய் மலரும்;
என்றோ நடந்த நிகழ்வை, நிகண்டு போல் சுட்டிக்காட்டாதே;
புதையல் என்று தோண்டி தோண்டி பார்த்து புதை குழியல் விழாதே;
புதுமை புதுமை என்று பொய்யான போலி வாழ்க்கையை தொடறாதே;
இருப்பதை வைத்து இன்பமாய் வாழப்பழகு;
எல்லை மீறினால் தொல்லை தான்;
எதற்கெடுத்தாலும் சண்டை போடுதல் கெடுதல் தான்;
எல்லாவற்றுக்கும் கோபம் பட்டால் வம்பு தான்;
வரவுக்கு மீறி செலவு செய்தால் வரும் பிரச்சனைகள் தான்;
பெண்ணே உணரும் நேரம் இது,
உன்னை பற்றி யோசி, உன் குடும்பத்தை நேசி;
கோபம் வரத்தான் செய்யும், கோபித்துக் கொண்டது போல் நடி;கோபத்தை தொட விடு;
தொடரவிடாதே, படரவிடாதே
பகையால் பழிதீர்க்க நினைக்காதே;
தட தட பட பட என்று பேசி தவறான முடிவை எடுக்காதே;
தற்கொலை தீர்வல்ல பிரச்சனைகளுக்கு;
தவறு செய்தவன் ஒருவன் இருக்க,
தண்டனை உனக்கெதற்கு;
தைரியமாக எதிர் கொள்;
அவமானப்பட்டாலும், தன்மானத்தை விட்டுக் கொடுக்காதே;
பேசுவதை விட, பேச விடு; பிரச்சனை தானாய் தீர்ந்து விடும்;
உறவுகளை கொச்சை படுத்தாதே;
உள்ளத்தை ரணப்படுத்தாதே;
உள்ளதை உள்ளபடி பேச பழகு;
உள்ளதை விட்டு ஊர்பகை தேடாதே;
உள்ளுக்குள் வைத்து புழுங்காதே;
புலம்பலில் இல்லை தீர்பு;
புரியாவிட்டால் வரும் மனச் சோர்வு;
புரிதலே உய்வு;
சிறு சிறு பிரச்சனைகளை ஊதும் போதுதான் பெரிதாய் வெடிக்கும்;
ஊதுவதை விடுத்து; உணர துவங்கு;
சீ அவ்வளவுதான் என்று ஒதுக்கிப் பார்;
பிரச்சனை தீர்வே தேடாது தீர்ந்து விடும்;
எப்படியாது சண்டை இன்று போட்டே தீரவேண்டும் என்று கங்கணம் கட்டி,
சப்தம் ஆர்ப்பாட்டம் போடாதே;
தவறை சுட்டிக்காட்டி, சண்டையை தூண்டாதே;
சன்மார்க்க நெறியைத்தேடு;
சாத்வீகத்தை தொடரு;
சத்தியாக்கிரகத்தை கையில் எடு;
இல்லத்தையும் உள்ளத்தையும் அமைதி பூங்காவாக்கு;
அன்புத் தென்றலை வீச
அன்பத்தேறலை அள்ளித் தெளி;
அதட்டி கேட்பதை விட, அறிவாய் கேள்வி கேள்;
ஆனவ தீயை மூட்டி விடாதே;
ஊதினால் தான் நெருப்பு பற்றும்;
உறவாடினால் தான், அன்பு பற்றும்;
உரையாடினால் தான் தவறுகள் திருந்தும்;
இல்லத்து அரசி நீ, உல்லத்திலும் அரசி நீ
இதயத்தில் வசி, எல்லாரையும் நேசி;
இறுக்கமாக இல்லாமல் யோசி;
சிறு சிறு வார்த்தைகள் சிதைத்து விடும் உன் அமைதியை;
சீறிப்பாய்ந்தால் சினமும் சீற்றமும் தான் வரும்;
தேளாய் கொட்டாதே, தேவை இல்லாததை பேசாதே;
வெடுக் வெடுக் என்று கேட்பதை விட்டு
வெறுப்பில்லாமல் பேசு;வெற்றி உனக்குத்தான்;
படுத்தும் பாடு, தடுக்காது தவறை;
தள்ளி நின்றால் தீறாது தவறு;
கொடுக்கும் அன்பில் குறையில்லை என்றால்
எடுக்கும் பாசம்;
வெடுக் வெடுக் என்று வேண்டாததை பேசாதே;
வெறுப்பை நெருப்பாய் கொட்டாதே;
ஆற்றாமையை அன்பால் காட்டு;
அடக்கமாய் செயல் படு;
விருப்பை விரும்பியே கொட்டு;
முத்திக்கு வித்து ஞானமே;
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
பாசத்திற்கு வித்து அன்புக்குள் அடைக்லம் ஆதலே;
சத்திக்கு வித்து சாந்தமே;
உபசாந்தம் ( விருப்பு வெறுப்பு) அற்றிருத்தல் உபன்யாசத்திலும் பெரிது;
முகசாந்தம் மூலோகத்திலும் பெரிது;
பெரிதினும் பெரிது கேள் :
பொறுமையாக யோசித்து பதில் சொல்லல்;
அரிதிலும் அரிதுகேள், பொறுமை கொள்ளல்
கல்லுக்கு ஓடும் நாயே; சொல்லுக்கு ஓடும் பேயே;
என்று பிடிவாதத்தை விரட்டு;
உறவை வெட்டிவிட வரவில்லை,
உறவை விட்டுப்போக வரவில்லை;
உறவாட வந்துள்ளோம்;
வெட்டிகதை பேச நேரமில்லை;
ஒட்டி உறவாடு;
ஆற்றாமையை அன்பால் காட்டு;
அடக்கமாய் செயல்படு;
படுத்தும் பாடு தடுக்காது தவறை;
கொடுக்கம் அன்பை கொட்டிப் பாரு’
வெட்டிப்போகாது உறவு;
வெறுப்பு தட்டாதது பணிவு;
கசக்காதது அன்பு;
கெட்ட மனசு கெடுதல் தான்;
கெடுக்கும் உறவு கேள்விக்குறிதான்;
கேளியே திறவுகோல்;
துறந்துவிடு;
கடல் தாண்டும் பறவையாய் இரு;
கல் தாண்டும் பறவையாய் இருக்காதே;
கரைதேடும் அலையாய் இருக்காதே;
கடல் பெரிதுதான் ஆர்ப்பரிக்கும் அலை சிறிதுதான்;
ஆனால் அதன் ஆட்டம் ஆற்றல் பெரிதுதான்;
அன்புக்கடலில் நீந்து;
பண்பு என்னும் அலையை சுமந்திடு;
பணிவோடு பழகிடு; பனியாய் உறுகு;
பக்குவப்படு;
பயம் இல்லை ஜெயமே என்றும் வாழ்வில்;
அள்ளிச்சென்று அணைப்பது கடல் தாய்;
அள்ளிக் கொடுத்து அணைப்பது தாய்மை;
சுமைய என்று நினைக்காதே வாழ்வை ;
சுகம் சுகம் என்றே சுகமாய் வாழப்பழகு;
சுமையும் சுவைக்கும்;சுற்றமும் இனிக்கும்;
பெண்ணேகேள்; பெண்மையே வாழ்
ஊதினால்தான் உறவு; மீதியில் தான் அன்பு
மின்ஞினால் வம்பு;பாதியில்தான் பிரிவு;
வீதியில்தான் முடிவு; பகையில் தான் முறிவு;
பயத்தில் தான் நடுக்கம்; பாசத்தில் தான் பற்று;
தயக்கம் எதற்கு தடுமாற்றம் எதற்கு
தள்ளிப்போவது எதற்று;
பெண்ணில்லை என்றால் பிறப்பில்லை; பெண்மை இல்லை என்றால் நாகரீகம் இல்லை;
பெண்ணியம் இல்லை என்றால் கண்ணியம் இல்லை;
மறவாதே பெண்ணே;
பெண்மைதான் பெரிது;
வானினும் பெரிது வாழ்க்கை;
வீழ்த்தக் பழகாதே; வாழ்த்த, வாழப்பழகிக்கொள்
வாழ்த்து பெற பழகிக்கொள்;
வாழிய பெண்ணே;
எழுந்துவா பெண்ணே;
எழுச்சி பெறு பெண்ணே;
புரட்சி செய் பெண்ணே.
அன்பன் அ. முத்துவேழப்பன்