குழந்தைகள் பாடம் இது

குழந்தைகள் மனம் குடியிருக்கும் தெய்வம் அது
ஆயிரம் கோயில்கள் ஊன்றிருக்கும் நல்ல குடில் அது
நல்லதை நல்லோரிடமிருந்து வாங்கும் கற்றல் அது
நல்லதை நலிந்தோருக்கு சொல்லும் பாடம் அது
இல்லார்க்கு இல்லை என்று சொல்லாதது அது
உள்ளதை அள்ளிக் கொடுக்கும் உள்ளம் தான் அது
வந்த வாழ்க்கை வரமென்று சொல்லும் புதியது அது
வந்தவரை வாழவைப்பதில் என்றும் பழைமை அது
நம்மை பெற்றெடுத்த பெற்றவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் பேறானது அது
உலகை நல்லவழியில் வழி நடத்தும் ஊன்றுகோலானது அது
எதிலும் நிறை காணும் கண்ணானது அது
மாற்றாரை மயக்க வைக்கும் மந்திரக்கோலானது அது
கேட்டார்க்கு கேட்டதை கொடுக்கும் கொடையானது அது
கொடுத்தார்க்கு நன்றி சொல்லும் நல்ல குணமானது.

எழுதியவர் : சு.சிவசங்கரி (14-Mar-23, 3:28 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 124

மேலே