இதயங்கள் இணைந்தால்

இதயங்கள் இணைந்தால்...

🌺🌺🌺

தொடுவானம் தாண்டி
தொலை தூரம் கடந்தாலும்
மெலிதாக செவி வீழும் - நின்
சிறு பெயரும் சிலிர்க்கச் செய்யும் ;

ஓயாத கடலலையாய் - நின்
நினைவலைகள் நெஞ்சகச் சுவர்தாக்கும் ;

நிலைகுத்தி நிற்கின்ற
விழியிரண்டில்
நெடிதுயரும் - நின்
சிற்றுருவம் வானம் வரை ;

எண்ணங்கள் ஒன்றாகி
இதயங்கள் இணைந்தாலே
தூரங்கள் இல்லாத
காலங்கள் விடிந்திடுமே!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (17-Mar-23, 8:41 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 146

மேலே