கவிதை எழுதப் பழகு

நேரிசை வெண்பா


இரண்டுவி ளத்தில் இரண்டுமாவில் நேரைத்
தரவாகும் காய்ச்சீருந் தானே -- உரமாய்
புளிமாதே மாங்காயும் கூவிளங்கா யாம்நேர்
அளித்து கருவிளங்காய் ஆக்கு


தேமா. நேர். =. தேமாங்காய்
புளிமா . நேர் =. புளி மாங்காய்
கூவிளம். . நேர். =. கூ விளங்காசு
கருவிளம் . நேர். =. கருவிளங்காய்

தேமாங்காய். =. கொல்லாது பொல்லாப்பு கண்ணாரு காதாலே
கன்னிப்பெண் கண்ணில்காண்

புளிமாங்காய் = தளுக்காக பொசுக்கிப்போ நடுக்கப்பார்
கிடாக்குட்டி, கடக்கப்பார் போன்று புளிமாங்காய்

கூவிளங்காய் = சொல்வதைக்கேள் வில்லதாலே போன்றவை
கூவிளங்காய்

கருவிளங்காய். = பலபழமே பலாப்பழமா பளபளப்பு பளார்பளாரு
கருவிளங்காய்

உதாரணங்களை மாற்றி எழுதிப் பழக கைவரும்

எழுதியவர் : பழனி ராஜன் (21-Mar-23, 11:20 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 59

மேலே