அரங்கனின் அழகொன்றே அழகு
ர்
சிந்தனைக்கு எட்டுவது எல்லாம் காமம்
அந்த அழகு மங்கையர் தேகம் என்றே
நினைத் திருந்து வீணானேன் இன்று
உந்தன் மேனி கண்டப் பின்னே
எந்தாய் இனியான் இப்பிறவியில்
எதையும் நாடேன் அரங்கத்தம்மானே