காதல்..//

விழிகளில் காண்டீபம்
ஏந்திய காதலி நீயடி..//

நிராகத பாணியாய்
நிற்கும் கள்வன் நானடி..//

என்னை வீழ்த்த வேல்விழி
எறிவது சரிதானா..//

நிலையற்ற நான்
நிம்மதியற்று போகிறேனடி..//

செந்தூரம் பூசிய
செவ்வந்தி..//

உன் சிங்கங்கள் போதுமடி
நான் விழுந்து போக..//

உன் மடியோடு
என்னை அனைத்து
கொள்ளடி மார்போடு
சாய்ந்து உயிர் துறக்கிறேன்..//

எழுதியவர் : (25-Mar-23, 7:35 pm)
பார்வை : 56

மேலே