சற்றுதிர்ப்பாய் உன்புன்னகை

வெற்றி புருவங்கள் வென்றிடும் வில்லோவுன்
நெற்றி யினில்நிலவு நீந்துதோ சொல்லிடுவாய்
வற்றா நதியோஉன் வான்மேகப் பூங்கூந்தல்
சற்றுதிர்ப்பாய் உன்புன்ன கை

எழுதியவர் : கவின் சாரலன் (26-Mar-23, 4:09 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே