காதல் பூமி 💕❤️

நிலமகளே நீ இருக்க

நிம்மதியாய் நான் இருக்க

நிழலாய் குடை பிடிக்க

இதமாய் நான் நடக்க

உன் மடியை நீ கொடுக்க

பசுமையை நான் ரசிக்க

பச்சை பட்டு உடுத்தி நீ சிரிக்க

பாவை என நான் வியக்க

அழகாய் நீ இருக்க

உன் அன்பில் நான் இருக்க

எழுதியவர் : தாரா (27-Mar-23, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 205

மேலே