வளரும் தமிழே வரலாறு கூறும் - கவிஞர் இரா இரவி

வளரும் தமிழே வரலாறு கூறும்
- கவிஞர் இரா. இரவி
*****

கீழடி வரலாறு நம் தமிழின் வரலாறு
கீழ்அடியில் கிடைத்ததில் தமிழ் எழுத்துக்கள்!

எழுத்தறிவோடு வாழ்ந்தவர்கள் தமிழ்க்குடிமக்கள்
எந்த நாகரீகத்திற்கும் முந்தைய நாகரீகம்!

உலகின் முதல் மனிதன் பேசிய மொழி தமிழ்
உலகம் உணர்ந்தது தமிழன் தான் உணரவில்லை!

உலகமொழிகளின் மூலம் நமது தமிழ்மொழி
உலகமொழிகள் அனைத்திலும் உள்ளது தமிழ்!

ஆங்கிலம் தொடங்கி அத்தனை மொழியிலும் தமிழ்
அற்புதத் தமிழ்ச்சொற்கள் இல்லாத மொழியே இல்லை!

உலகின் முதல்மொழிக்குச் சொந்தக்காரன் தமிழன்
உலகம் வியந்து பாராட்டும் மொழி தமிழ்மொழி!

நீண்ட நெடிய வரலாறு படைத்த மொழி தமிழ்
நாம் அனைவரும் தமிழ் வளர்க்க வேண்டும்!

தமிங்கில உரையாடலுக்கு முடிவுரை எழுதிடுவோம்
தமிழை தமிழாகவே நாளும் பேசிட உறுதி எடுப்போம்!

பிறமொழி கலப்பை உடன் நிறுத்திடுவோம்
பண்டைத்தமிழைக் காத்திட தரணியில் திரள்வோம்!

தேசப்பிதா காந்தியடிகள் விரும்பியது தமிழ்மொழி
தேசங்கள் தோறும் ஒலித்திடும் தமிழ்மொழி!

ஒப்பற்ற உயர்ந்த தனி செம்மொழி தமிழ்மொழி
ஓங்கி உரைப்போம் முதல்மொழி தமிழ்மொழி!

அழியாமல் தமிழை காப்பது நமது கடமை
அணியமாவோம் அழகுதமிழை நாளும் வளர்ப்பதற்கு!
******

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (28-Mar-23, 3:23 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 24

மேலே