முரண்பாடு
சீற்றம் மிக்க ஆழிப்
பேரலை யாக ஆழ்மனதும்,
ஆழ்கடலின் மரண அமைதியாய்
முகமும் காட்டும் பெண்கள்,
இயலாமை!!
கட்டுப் படுத்தும்
அங்குசம் இரண்டு...
அன்பால் தம்மை அறியாமல்
தாமாகவே பாசச் சிறையில்
கட்டுண்டு கிடப்பது,
மரணத்திற்கு இணையானது!!
அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு
உயிர் பயத்தால் அடங்கிக்
கிடப்பது,
மதில் மேல் பூனை!!