தோழமைகளே உயிர் தர வாரீர்
தோழமைகளே !
தோழமைகளே !
வாரீர் வாரீர்...!
தோழா....
நான் உன் உடைமையாவேன்
நான் பெற்ற என் பிள்ளைக்கு
உயிர் தர வாரீர் - அவன்
நன்றிக்கடனாக
கோடை காலங்களில்
நிழல் ஒன்றை தருவான் ...
உன் தாகம் தீர்க்க
நீரினை அழைப்பான்
உன் பிள்ளைகளை
தொட்டில் கட்டி வளர்ப்பான்
நீ நீர் ஊற்றி வள - அவன்
சுவாசம் கொடுத்து வளரப்பான்
தோழா...
நீ அவனுக்கு வேலிகளாக இரு
அவன் உன் களைப்பு - தீர
கட்டிலாக மாறுவான்
உன் பிள்ளை -தூங்க
தொட்டிலாக இருப்பான்
தோழா ...
உயிர் ஒன்று தா - அவன்
உணவு பல தருவான்
எம்பிள்ளைகள் போல்
என்னற்ற பிள்ளைகளை வள
அவர்கள் உன் சந்ததிகளை
வளர்ப்பார்கள்...
உயிர் ஒன்று தா - நான்
உன் உறவு என்று சொல்ல
என் உறவினர் பலர் வந்து சொல்ல
உயிர் ஒன்று தா...
அ.நாச்சான்