மழை

மண்ணுறுகக் காய்த்தது வெய்யல்
காய்த்து போய்விட்டான் கதிரவன்
பாளம் பாளமாய் வெடித்து கிடந்த மண்
காலம் கடந்து போக மண்ணையே
பொன்னாக நினைக்கும் உழவன்
செய்வதேதும் தெரியாது தொண்டை அடைக்க
செயலிழந்து வாழ்க்கையின் எல்லை நோக்கி...

எங்கிருந்தோ வந்தது பலத்த இடியோசை
திரண்டுவந்து விண்ணில் மேக்கப் குவியல்
அலையலையாய் மோதி கோடி மின்னல் இடி..
இதுதான் ப்ரளயமோ என்று நினைக்கும் விதம்
கொட்டி தீர்த்தது மழை......
மணலாராம் பாலாறும் நீர்பெருகி வழிந்தது ஓடியது !
மண்ணின் ஆழ்ந்த தாகம் தீர ஈரமானது
நாளையை நினைத்த நொந்த உழவன்
இப்போது ஆனந்தத்தில் கூத்தாடுகிறான்...
இதோ உழுது விதை விதைக்க நாளைப்பொழுதை
எண்ணி காத்திருக்கிறான் தூக்கம் வாராது

ஒரு பொழுதில் துக்கப் போர்வையை
விலக்கி இன்பம் எங்கும் பரப்பியது
மாமழை......இயற்கை அன்னையின்
வற்றா கொடை அமுது .......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (8-Apr-23, 3:58 pm)
Tanglish : mazhai
பார்வை : 41

மேலே