ஓ மலர் ரோஜா ஏன் இந்த மௌனம்
![](https://eluthu.com/images/loading.gif)
ஓ மலர் ரோஜா
ஏன் இந்த மௌனம் ?
முள் சூழ்ந்திருக்கும் வருத்தமா ?
எந்த பெண்ணும் வந்து பறித்து
இன்னும் கூந்தலில் சூடவில்லையே
என்ற ஏமாற்றமா ?
அல்லது
எந்த ஒரு கவிஞனும் இன்னும்
புகழ்ந்து பாட வரவில்லையே என்ற ஏமாற்றமா ?
நெஞ்சினில் தேனேந்தி
வண்ண இதழ்களை அழகினில் விரித்திடும்
என் இனிய ரோஜாவே
இதோ உனக்காகவே நான் வந்துவிட்டேன் என்றேன்
ரோஜா சிரித்தது