வெப்ப அலைகள்
வெப்ப அலைகள்
வீச மறந்த காற்று
அசைய மறுத்த
இலைகள்
எங்கோ ஒளிந்து
போன நிழல்கள்
ஈர மேக
கூட்டங்களை
விரட்டி அடித்து
அரசாட்சி புரிகிறது
சூரிய கதிர்
அலைகள்
ஆட்சியின் கொடூரம்
வறண்டு கொண்டிருக்கும்
ஏரி
பொய்த்து போன
மழைகள்
காய்ந்து கருகும்
உயிரினம்
உள்ளுக்குள்
கெக்கலிட்டு சிரிக்கிறது
இறந்து போன
மரங்கள்
சுய நலமாய்
என்னை கொன்று
எரித்த உனக்கு
இன்னும் வேண்டும்
இதற்கு மேலும்
வேண்டும்