காதல் பிரிவின் புரிதல்
காதல் ஒரு வானிலை போலே
வந்தாய் என் கனவே முன்னே
விழி நீரில் வழிந்து ஓடும்
காதல் கவிதை நீ...
கனவில் ஒரு நிஜத்தை தேடும்
கோதை பெண்ணே நீ...
காதல் ஒரு வானிலை போலே
வந்தாய் என் கனவே முன்னே
விழி நீரில் வழிந்து ஓடும்
காதல் கவிதை நீ...
வழி பாதையில் காலடித்தடங்கள்
தேடும் கண்ணே நீ...
காதல் ஒரு வானிலை போலே…
உன்னை தூரம் காணும் பொழுது
சிறு குழந்தையாகும் தருணம்
நீ அருகில் வரும் பொழுது
ஒன்றாய் கைகள் கோர்க்கும் தருணம்
உன்னை மீண்டும் மீண்டும் காண
விழிகள் ஏங்குதே...
உன் தோளில் சாய்ந்து வாழ
நெஞ்சம் ஏங்குதே...
மேகங்கள் இடையில் ஒளிரும்
ஒளியை போலே...
என்னுள் நீ உன்னுள் நான் நம்முள் நாமாய்
வானில் திரிந்து பரோபோம் வா
கைகள் கோர்த்து நடப்போம் வா அன்பே வா
மீண்டும் வாழ்வை வாழ்வோம் வா…
கண்ணே வா பெண்ணே வா...
காதல் பிரிவின் புரிதலை அறிந்தோம் வா...