அவளும் அவள் கிளியும்
' நீ அழகி , பேரழகி
நீ மட்டும்தான்
என்றும் என்னினிய
காதலி நீயே'
'ஓ, ஓ, அன்பே
நீ வந்துவிட்டாயா '
என்றவள் அங்கும் இங்கும் பார்க்க
யாரும் இல்லை. .....
அவளுடைய ' அங்கு இல்லவே இல்லை'
பின்னே ......அந்த ஓசை.....
அவள் வளர்த்த கிளி
அவள் தோளின் மேல் ....
அன்று அவன் அவளைக் கொஞ்சி
கூறிய அவ்வினிய சொற்களை
இப்போது கூறியது'''
தனிமையில் எங்கும் தன தலைவிக்கு
இப்படி ஆறுதல் சொல்ல நினைத்ததாம்
அவள் கிளி .......சொன்னதை சொல்லும்
இடம், பொருள் , ஏவல் அறிந்தே
சொல்லும் கிளியோ அதுவோ ?