நிலாவில் களங்கம்
நிலவுதான் என்செய்வான் பாவம் அவனுக்கு
தொல்லை தர தாரங்கள் இருபத்தெழுவர்
நீலவானில் பவனிவரும் பால்நிலா முகத்தில்
கொள்ளை அழகு தாரகை ஒவ்வொருவரும்
முத்தமிட முத்தமிட போர்க்களத்தில் அம்பு
பாய்ந்த வீரன் முகம்போல் களங்கப்பட்டது
வீரனுக்கு வடுஅழகு நிலவிற்கோ
அவன் தாரங்கள் இட்ட முத்தவடு
அழகிற்கு அழகா னது