இவளுக்காக வாழ
இவளால்
இவளுக்குள் புகுந்த
இவனை
இனி எப்படி
இவனுக்குள்
இன்னொருத்தி வருவார்
இனிமையான நாட்கள்
இன்னொரு முறை
இன்னல்கள்
இல்லாமல் வந்திடுமோ
இதயம்
இப்படி தவிக்கிறதே
இருட்டுக்குள்
இருக்கும் ஆந்தையாக
இருக்கிறேன்
இவனை நம்பி
இனி வருவாளோ
இவளோ அவளோ
இன்பம் வர மறுக்கிறது
இவள் இன்றி
இருப்பினும் சொல்ல முடியலையே
இசையாக கரைகிறேன்
இறந்த பின்னும்
இவளுக்குள் வாழ