கவிதைகள்

எழுத்துலகில்
கவிதைகளை குறித்து
எந்தன் கண்ணோட்டம்

மரபுக் கவிதைகள்
பட்டாடையுடுத்தி வரும்
மாந்தரைப் போல்

புதுக் கவிதைகள்
பருத்தியாடையுடுத்தி வரும்
மாந்தரைப் போல்

இருவகை மாந்தர்களும்
தங்கள் சொல்லாடலில்
சிந்தனையை வளமாக்கும்
தரமான கவிதைகளால்
விருந்து படைத்திட
படித்து மகிழ்ந்திட
வாசகர்களுக்கு
என்றும் கொண்டாட்டமே....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (17-Apr-23, 6:51 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kavidaigal
பார்வை : 454

மேலே