அன்னை தமிழை காப்போம்

ஞாலத்தில் தேவையடா மானிடனே
காலமும் உணர்த்துமடா நிச்சயமே !
நிம்மதியும் தொலைந்த பாரினிலே
நித்தமும் சச்சரவுகள் நாட்டினிலே !
காரணம் தேடுகின்றார் நாளுமே
தோரணம் கட்டுகின்றார் போராடவே !

உச்சத்தில் ஆடுவதிங்கு மொழிவெறி
உத்தரத்தில் தொங்குகிறது இனவெறி !
உதிரத்தில் கலந்ததன்றோ தாய்மொழி
உக்கரத்தில் துடிப்பதோ பழிக்குப்பழி !
உத்வேகத்தில் முடிப்பது அடக்குமுறை
உத்தரவாதத்தில் நிற்பது நெறிமுறை !

அடங்கியே போனால் ஆண்மையல்ல
அடக்கியே தீருவதும் ஆர்ப்பாட்டமல்ல !
அறிவிலிகள் நினைப்பதோ நடக்காது
அறிவாளிகள் நாமென்பதை மறுக்காது !
அழிக்க நினைத்தவர்கள் அழிவதென்பது
அன்னைத்தமிழின் அழியாத வரலாறே !


பழனி குமார்
15.04.2023

எழுதியவர் : பழனி குமார் (16-Apr-23, 8:41 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 111

மேலே