அழகில் அவள் காவியத் தலைவி
நீலவானில் பால்நிலவாய் அவள் முகம்
பால்நிலா முகத்தில் துள்ளும் கயலிரண்டு
துள்ளும் கயலிரண்டும் கன்னியின் விழிகள்
அள்ளும் அழக அவிழிகள் பார்க்க பார்க்க
சொல்லும் கதைகள் ஒரு காவியம்
அதைப் பார்க்க பார்க்க பரவசமானேன்
அந்த நயனத்தில் என்னை மறந்தேன்
மீண்டும் என்நிலை அடைந்தபோது
என்முன்னே மெல்ல நடந்தாள் அவள்
சிற்றிடையாள் சின்ன யானை நடை அழகு
கண்டு அன்னமும் தன நடை மறந்து
ஓரமாய் நின்று ரசித்தது போல் காட்சிதந்தது
அன்னமும் ரசித்த சின்ன யானைநடை
கண்ணழகு ஒரு காவியம்பாட நடை அழகும்
அரங்கேற்றியது மற்றோர் காவியம் அங்கே
இப்படி அவள் அழகில் காவியத்தலைவி

