உலகப் புத்தக தினம்
புத்தகங்களை
வாசிக்க வாசிக்க
புதிய புதிய சிந்தனைகள்
மனமென்னும் கேணியில்
ஊற்றுப் போல் சுரக்குமே
சுரக்கும் நற்சிந்தனைகள்
கத்தியின்றி ரத்தமின்றி
அறிவுப் புரட்சியை உருவாக்குமே.
அறிவுவெனும் கடலுக்கு
"புத்தகம்" கலங்கரை விளக்கம்
அஃதே அறியாமையெனும்
இருளை போக்கும் ஒளி விளக்கு
அறிவுப்பசியை தீர்த்து வைக்கும்
அட்சய பாத்திரம் "புத்தகம்"
மனமென்னும் சிறைச்சாலையின்
திறவுகோல் புத்தகச்சாலையே
தலை நிமிர்ந்து வாழ்வில் நடந்திட
தலை குனிந்து "புத்தகம்" வாசி
வாசிப்பை மற்றவர்களோடு
பகிர்ந்து மகிழ்ந்திடுவோம்
புத்தகங்களை
வாசிக்கும் பழக்கம் மக்களிடம்
குறைந்துக் கொண்டே வருவது
சற்றே வருத்தம் தருகின்றது
உலகப் புத்தக தினமாம் இன்று
எல்லோரும் சபதம் கொள்வோம்
"புத்தகம்" வாசிக்கும் பழக்கத்தை
எழுச்சிக் கொள்ள செய்வோம்.
உலக மக்கள் அனைவருக்கும்
இனிய "உலகப் புத்தக தின" நல்வாழ்த்துக்கள்....!!!
--கோவை சுபா