சும்மா இருந்தால் தவறா

சும்மா இருந்தேன்
வருவோர் போவோர்
சும்மா இல்லாமல்
சும்மா உள்ளாயா என
சும்மா கேட்கும் கேள்வி
சும்மா இருந்த என்னை
கோபத்தை ஏற்படுத்த
சும்மா சும்மா ஏனிந்த
கேள்வியென நானும்
சும்மா எரிந்து விழ
சும்மா தான் கேட்கிறோமென
என்றவுடன் சும்மா இருந்த
எனக்கு கோபம் தலைக்கேறி
சும்மா இல்லாமல் சுருக்கென
சும்மா இருந்தவனுக்கு பற்றியெரிய
சும்மா கல்லெடுத்து வீசினேன்
ஓடுபவன் சும்மா ஓடாமல்
சும்மா தானே கேட்டேனென்று
சும்மா சும்மா என மீண்டும்
கூறிக் கொண்டே ஓடினான் !

சும்மா இருந்தால் தவறா
சும்மா சும்மா ஏனிந்த
சும்மா செல்பவர்கள்
சும்மா கிடந்த என்னை
சும்மா போகாது கூறவே
சும்மா எனக்கும் ஆத்திரம்
சும்மா நானும் பொங்கிட
சும்மா இருந்த மனமும்
குடைச்சல் தரவே சும்மா
இருந்த நானும் எழுந்து
ஓட ஆரம்பித்தேன் ....!

சும்மா இருந்த நான்
சும்மா தான் எழுதினேன்
சும்மா படிக்கும் நீங்கள்
சும்மா ஏதும் பாராட்டாமல்
சும்மா தாருங்கள் பரிசு ஒன்றை !


பழனி குமார்
22.04.2023

எழுதியவர் : பழனி குமார் (22-Apr-23, 8:49 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 54

மேலே