​​காண வேண்டும் உன்னை

சாதிக்க நினைத்தால்
சாதனை புரியலாம் !
போதனை செய்தால்
வேதனை மேலோங்கும் !
தனக்குப் பின்னாலும்
தடயங்கள் வேண்டும் !
வாழ்ந்ததின் அடையாளம்
மறைந்த நம் நினைவுகள் !

நாம் விட்டுச் சென்றவை
நம்மைப் பற்றிக் கூறும் !
ஏசிடும் ஒருசில நபர்களை
பேசிட வைக்கும் நிச்சயம் !
நமக்குத் தெரிந்த வழியில்
பலருக்கு புரிகிற வகையில் !
ஏதோவொரு நல்ல செயலை
ஏற்றிடும் முறையில் செய்க !

பதிய வேண்டும் நெஞ்சில்
புதிய செயலென தேடாமல் !
நிலைக்கும் என நினைத்து
காரியம் ஒன்றை செயலாக்கு !
தகுந்த ஒன்றை செயல்படுத்த
உகந்த முறையில் தேர்ந்தெடு !
காண வேண்டும் அதன்மூலம்
காலம் கடந்தாலும் உன்னை !


பழனி குமார்
28.04.2023

எழுதியவர் : பொது (28-Apr-23, 2:34 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 50

மேலே