கண்ணாடியில் விழுந்த விரிசலாய் நம் காதல் 555

***கண்ணாடியில் விழுந்த விரிசலாய் நம் காதல் 555 ***


ப்ரியமானவளே...


விழியை விட்டு பிரியாத
இமைகளை போல...

பயணித்த
நம் காதல் உறவு...

கண்ணாடியில்
விழுந்த விரிசலாய் இன்று...

உன் காதலோ
கலைந்து போனது...

கலையவில்லை
என் காதல் கோட்டை...

உன் அதீத
அன்பு தீர்ந்துவிட்டது...

என் கண்களின் கண்ணீரோ
தீரவில்
லை இன்னும்...

நம் காதலில்
ஏற்பட்ட விரிசலை...

உன்னையன்றி நான்
யாரிடம் சொல்ல
முடியும்...

தவிக்குது நம் காதல்
யாருமின்றி அனாதையாக...

காதலும் கடந்து
போகும் என்கிறார்கள்...

காதல் வலி எதுவும்
மாறவில்லை இன்றுவரை...

நினைப்பதை மறந்தால் மட்டுமே
நி
னைவே நீதான் என்றால்...

சேர நினைத்த நம்
சுவாசம் பிரிந்திருக்கிறது...

இயற்கையை ரசித்த என் மனம்
இன்று அதையும் ரசிக்கவில்லை...

பல கேள்விகளுக்கு
விடையாக கண்ணீர்
கிடைக்கிறது...

என் காதலுக்கு
பரிசாக.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (28-Apr-23, 5:52 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 164

மேலே