இன்பம் நிலைக்க வழிதேடு

தேடி வரும் அதிர்ஷ்டம்
என்று காத்திராதே !
நாடி சென்று முயன்ற
எவரும் தோற்பதில்லை !
காரியம் கைகூடுமென
வீரியம் பேசாதே !
நெளிவும் சுளிவும் அறிந்திட
பணிவும் பண்பும் தேவை !
குறுகிய மனதுடன் இராதே
குறுக்கு வழியை தேடாதே !
அடுத்தவர் பற்றி நினையாதே
அடக்கம் இன்றி வாழாதே !
சுயநலம் அகற்றி வாழ்ந்திடு
பொதுநலம் நினைத்து வாழ் !
உழைத்து வாழ கற்றுக்கொள்
பிழைக்க பலவழி உண்டு !
குற்றம் குறை கூறாமல்
தீர்வு காண்பதே சிறந்தது !
இன்பம் நிலைக்க வழிதேடு
துன்பம் மறந்து வாழ்ந்திடு !
பழனி குமார்
30.04.2023