மெளனம் பலவிதம்

மொழிகள் பலவிதம்
சிந்தனைகள் பலவிதம்
கலாசாரங்கள் பலவிதம்
மெளனங்கள் பலவிதம் !
பிறப்பில் உடன்பிறப்பது
இயல்பான மெளனம் !
பிறந்து வளர்ந்த பின்
காப்பது சூழல் மெளனம் !
அளவு கடந்த மகிழ்ச்சியில்
அழையாமல் வரும் மெளனம் !
அடக்கிடும் துக்கத்தில் எழுவது
அடக்கிய அழுகையின் மெளனம் !
வலி தாங்கா அதிர்ச்சியில்
மீண்டிட வைக்கும் மெளனம் !
ஆழ்ந்த நட்பின் பிரிவால்
அங்கத் துடிப்பின் மெளனம் !
இழந்த உறவை நினைத்தால்
இழப்பீடுத் தந்திடும் மெளனம் !

அகிலத்தில் ஆயிரம் உண்டு
நாம் காணும் மெளனங்கள் !
நிலைக்கேற்ப மாறும் மனிதன்
கற்றறியா நன்மொழி மெளனம்!
சாலச் சிறந்தது பலநேரங்களில்
காலத்தும் காக்கும் மெளனம் !
இடைவெளி குறைந்து நெருக்கம்
கூடிட வழிவகை வகுக்கும் !

காத்திடும் நம்மை காலமும்
சேர்த்திடும் என்றும் மெளனமும்!
மொழிகளில் தேவை அறிந்திட
மொத்தத்தில் நமக்கு மெளனம் !


பழனி குமார்
30.04.2023

எழுதியவர் : பழனி குமார் (30-Apr-23, 2:10 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 74

மேலே