பூவின் பூவாய் பூவை அவள்
உதய கால கமலம் அலர்ந்தது
இதய கமலமாய் அலர்ந்தது அவள்முகம்
நீலோற்பலம் அகன்று மலர்ந்தது
அகன்று விரிந்தன அவள் நீலவிழிகள்
இந்துவைக்க கண்டு மகிழ்ந்து மலர்ந்தன
தடாகத்து அழகிய ஆம்பல் அங்கு
பூஞ்சோலையில் நுழைந்த அவள் அதரங்கள்
இப்படி சோலையின் ஒவ்வோர் பூவிலும்
அவள் பூத்திருப்பதை கண்டேன் நான்
பூவின் பூவாய் பூவை அவள்