என் விழிகளில் காதலை பாரடி 555

***என் விழிகளில் காதலை பாரடி 555 ***


உயிரானவளே...


உன்னிடம்
பழகிய நாட்களிலெல்லாம்...

குட்டி குட்டியாய்
பரவசம் அடைந்தேன்...

சி
ன்னன்சிறு
மழலையை போல...

பாசத்தின்
ஆழம் தெரிந்தவள் நீ...

என் பாசம்
புரியவில்லையா உனக்கு...

உன் அன்னையின் மகளாகவே
பார்த்து இருக்கிறேன்...

என் அன்னையின் மரும
களாக
உன்னை பார்க்க ஆசைகொண்டேன்...

சொல்லாத காதல் கடலில்
விழுந்த மழைத்துளி போல
...

யாருக்கும் தெரிவதில்லை...

வாய்விட்டு சொல்லாத என்
காதலும் உனக்கு அப்படிதானோ...

என் விழிகளை
பார்த்து பேசுபவள் நீ...

என் விழிகளில் உன்மீதான
காதல் தெரியவில்
லையா உனக்கு...

என் விழிகளில் தேங்கி நிற்கும்
என் காதலை பாரடி...

உன்னை என் விழிக
ளுக்குள்
வைத்து காப்பேன்...

உன்னை காலமெல்லாம்
என் துணையாக.....


***முதல்பூ.பெ.மணி
.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (1-May-23, 8:44 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 232

மேலே