தஞ்சமென் றேசொல்லித் தானவளின் அன்புகொண்டேன் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(விளம் காய் 3)
மஞ்சுளம் என்றந்த மங்கையின் பேர்சொல்வேன்;
அஞ்சுகம் என்பதுவும் ஆரணங்கின் பெயர்தானாம்!
வெஞ்சினம் உன்றனுக்கு வேண்டாமென் றேநவின்றேன்
தஞ்சமென் றேசொல்லித் தானவளின் அன்புகொண்டேன்!
- வ.க.கன்னியப்பன்