நண்பர்க்கு இரங்கற்பா

நண்பர்க்கு இரங்கற்பா

(நேரிசை வெணபா)

வாசலாம் முக்திக்கு காசிகங் கைநண்ப
வாசகசா லையொன்றாய் வாசித்தோம் -- பாசமிக்க
காசிநாதன் குக்கிராம வாசி கடந்துமலை
வாசித்தார் வேலூரும் வந்து

ஆசிரியப்பாக்கள்

கல்லூரி நாட்கள் பின்னே செல்ல
நல்ல சிந்தனை நண்பன் காசி
பண்பாளர் படிப்பாளர் பழகவும் இனிமை
புன்முறுவல் முகத்தை யார்தாம் மறப்பர்
அமைதி தவழும் சாந்த சொருபி
ஆஸ்டல் வாழ்க்கை ஆண்டு மூன்று
பின்னே சென்னை இரண்டாண்டு முதுகலை
பிறகு பள்ளி ஆசானாய் போனாய்
ஐம்பது ஆண்டு நிறைவு சந்திப்பு
ஒருவருக் கொருவர் தழுவல்
களிப்பிலே கழிய ஓர்நாள் முடிந்ததே

இரண்டு மாதம் முன் திருஅண்

ணாமலை நகரில் ஆசான் நூலதின்
வெளியீட் டன்று என்கைப் பிடித்து
வாஞ்சை யுடன்தடவி விட்டாய் நண்பா
நெஞ்சதை மறக்கு முன்னே
கொஞ்சமும் இரக்கமின்றி காலனுயிர் பறித்தானே


நேரிசை ஆசிரியப்பா
(ஒழுகிசை அகவல் ஓசை)

நல்ல பூக்கள் நந்த வனத்தில்
பறித்தார் போல பழுத்த பழமரம்
கல்லடி படுதர் போல நின்னை
நின்னுடை நினைவை கயவன் காலன்
கண்ணிய மிலாநின் இன்னுயிர்
பிடுங்கித் தின்றா னவனும் அரக்கனே...!



எழுதியவர் : பழனி ராஜன் (3-May-23, 12:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 128

மேலே