காதல் பெரிதாகி பற்றில்லை நாட்டின்மேல்

நாடு வேண்டாம் காதல் வேண்டுமாம்
தளமா மெழுத்திதனில் தாமாய் தமிழில்
வளமாய் திறமை வளர்க்க வழிவகுக்கும்
என்றுதான் நானும் எழுத்தினில் சேரவும்
அவ்வமயம் கண்ட அணைத்து உறுப்பினரும்
நல்ல திறமையுடன் கல்வியில் தேர்ந்தவராய்
பாடலினை மெச்சப் பயின்றிங்கே தந்தார்
யிலக்கணமாய் மொத்த யிலக்கணமும் கற்க
விழைவுடன் வேட்கையுந் தநானுமே எத்தனையோ
இங்கெழுதித் தள்ளினேன் பாடலிரண் டாயிரம்
பாயெழுத வந்தாரே பாகற்க இல்லை
அவரும் மொழிப்பற்று நாட்டுப்பற் றில்லா
அரைகுறை எல்லா மனாமதேய பேர்வழிகள்
யாப்புப்பே சப்பிடறிக் கால்பட ஓடினர்
குருட்டுக்கொக் காயின் புணர்தல் தவறாதாம்
காதல் கிறுக்கி தினம்தினம் தள்ளுகிறார்
கல்விமான் அத்தனையும் காணாது போனார்
தமிழை எழுதறியா தண்டம் சிலது
மனம்நோக தள்ளுதுபார் மானாவ ரிப்பா
நிறுத்த வருவதார்முன் நின்று



.......

எழுதியவர் : pazhaniy ராஜன் (2-May-23, 10:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 22

மேலே