தொகுத்து வழங்கினாள் தூது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அவளொடு நான்நடந்த அந்திப் பொழுதில்
அவளென்றன் தோள்சாய்ந்(து) அழகாய்க் - கவனம்
மிகுந்துவரக் கற்கண்டாய் மெல்லிய பாடல்
தொகுத்து வழங்கினாள் தூது!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-May-23, 10:25 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கவிதைகள்

மேலே