இமைக்காத இமைகள்
உனைக் காண்கையில் உள்ளம் கொள்ளை போகையில் நின்
கள்ளச் சிரிப்பைக் காட்டி காக்க
வைக்காதே, உருகும் என் மனம்
என்னிடம் நிற்காதே, உறவை கூட்டி
ஊரறிய கைத்தலம் பற்ற
கனவு கண்டேன் மாமனே
மையல் என்மேல் இலையோ,
மாதம் உருள்வது தெரியலையோ,
மங்கை நாணுவது புரியலையோ
பந்தலிட்டு தட்டுமாற்ற தயக்கம் தான்
ஏனோ , தகவல் தந்து நாள் ஆச்சு
மாமன் இன்னும் வரலையே,
மனசுக்கு ஒன்றும் புரியலையே,
மாமனே, யென்வாழ்வென ஆனவனே, நீ வரும் வரை வாசல்
காணும் என் விழிகளின் இமைகள்
இமைக்கா ...
இமைக்கா இமைகள் கொண்டு
தேவலோக அழகியாக காத்துக்
கிடைப்பேன் காலமெல்லாம்...