என் இதயம் கவர்ந்தவளே 555

***என் இதயம் கவர்ந்தவளே 555 ***


என்னுயிரே...


பேருந்து பயணத்தில்
இமைக்கும் நொடியில்...

என்
இதயம் கவர்ந்தவளே...

உன்னை
நினைத்து வர்ணிக்க.
..

கோடி வார்த்தைகளை
தாய் மொழியில் இருந்தும்...

எழுத வார்த்தைகள்
அகப்படவில்லையடி எனக்கு...

உன்னை கண்டதும் மழையின்
ஈரத்தில் சிலிர்த்த மேனிபோல்...

ன் ரோமங்கள்
எழுந்து நிற்குதடி...

நீ பேசும் போது நடனமாடும்
உன் இதழ்களில்...

அழகிய புது க
விதை
பிறக்குதடி...

உன் கண்ணசைவில் காதலோ
மிதந்து வருதடி என்னைத்தேடி...

நீ அவ்வப்போது
ஒதுக்கும் சில முடிகள்...

மயிலிறகாய்
உன் கன்னம் தழுவுதடி...

எனக்கும் உன்னை

தழுவ வேண்டும்...

என் மீசை முடியால்
உன் கன்னமெங்கும்...

என் இதயம் கவர்ந்த
பௌர்ணமி நிலவே.....


***முத
ல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (6-May-23, 9:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 273

மேலே