நன்மொழி சொல்லி னேனே நன்மகள் அருமை நோக்கி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
தென்றலைத் தூது விட்டாள்
..தேர்ந்துமே நிலவின் தோழி;
மின்னலைத் தூது விட்டாள்
..மேகலை யணிந்த பெண்ணாள்!
அன்றிலைத் தூது விட்டாள்
..ஆழமாய்க் காதற் சொல்லி;
நன்மொழி சொல்லி னேனே
..நன்மகள் அருமை நோக்கி!
- வ.க.கன்னியப்பன்