காதலால் உறவுகள் துளிர்த்திடுமா

எட்டிய தூரத்துல நிக்குதமா
வெட்டி எடுத்தத் தங்கமா !
விழிகள் இப்பக்கம் வீசுமா
காதல் மொழியும் பேசுமா !
இரவும் பகலாக மாறிடுமா
இன்பம் எனக்கு நிலைக்குமா !

கனிந்திடும் காலம் நெருங்கிடுமா
இனித்திடும் காதல் கைகூடுமா !
தோல்வி தழுவாது இருந்திடுமா
முடிவும் முடிவாக தெரிந்திடுமா !
விரைவில் எனக்கு விடிந்திடுமா
விரும்பிடும் மணநாள் வந்திடுமா !

காதலர்கள் எண்ணம் நிறைவேறுமா
காதலால் உறவுகள் துளிர்த்திடுமா !
காதல் தோல்விகள் குறைந்திடுமா
சாதி மதங்களால் பிரிந்திடுமா !
குற்றங்கள் கொலைகள் நீங்கிடுமா
சமுதாய சீர்திருத்தம் நிலைத்திடுமா !


பழனி குமார்
08.05.2023

எழுதியவர் : பழனி குமார் (8-May-23, 3:17 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 155

மேலே